ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவமதிக்கும் வகையில் நடத்தி செல்லப்பட்ட டுவிட்டர் கணக்கு தொடர்பில் தகவல் வெளியானவுடன் அந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
இந்த டுவிட்டர் கணக்கு தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.அபோகோனுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அவரது உத்தரவின் கீழ் ஜனாதிபதியின் புதிய ஊடக உதவி இயக்குநர் சமீர டி சில்வாவினால் இது தொடர்பில் டுவிட்டர் நிறுவனத்திற்கு அறிவித்தார்.
அதன் பின்னரே குறித்த டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரிபால சிறிசேன என்ற பெயரில் மோசடியான முறையில் இந்த டுவிட்டர் கணக்கு நடத்தி செல்லப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியில் இருந்து இந்த கணக்கு செயற்பட்டு வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.