தேசிய சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீரவை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று(05) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியல் நீடிப்பினை பிறப்பித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தின் போது அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது.
இந்த முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த மாதம் 28ஆம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு வருகை தந்த போது கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.