பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அபுதாபியில் இன்று நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இதன் 20 ஓவர் தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 ஒருநாள் போட்டி தொடரில் பாகிஸ்தான் முதல் 2 ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றி இருந்தது.
பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அபுதாபியில் இன்று நடக்கிறது. ஏற்கனவே தொடரை இழந்த மேற்கிந்தியதீவுகள் இதிலாவது வென்று ஆறுதல் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் ‘ஹாட்ரிக்’ வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
இதேபோல தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டியும் இன்று டர்பனில் நடக்கிறது. முதல் 2 போட்டியில் வென்ற தென்ஆப்பிரிக்கா இதிலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா பதிலடி கொடுக்கும் நிலையில் இருக்கிறது.