நிர்வாக விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேதனம் தொடர்பில் விமான போக்குவரத்து நிர்வாகத்தினர் முன்னெடுத்த தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் நேற்று(06) இரவு முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலினை தொடர்ந்து, குறித்த முடிவு எட்டப்பட்டதாக விமான போக்குவரத்து நிர்வாக சங்கத்தின் தலைவர் திசர அமரனந்த மேலும் தெரிவித்துள்ளார்.