வௌிநாட்டு மற்றும் உள்நாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலரது போக்குவரத்து தேவைக்காக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களை இலவசமாக வழங்கியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 10 திகதி முதல் 2016ம் ஆண்டு ஏப்ரல் 30ம் திகதி வரையில் இவ்வாறு விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நேற்று(06) பாராளுமன்றத்தில் வௌியிடப்பட்ட பட்டியலை கீழே காணலாம்.
