கட்சி தலைவர்களின் சிறப்பு கூட்டம் ஒன்று சபாநாயகர் தலைமையில் இன்று (16) நடைபெறவுள்ளது.
பாராளுமன்றில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது ஒருமித்த கருத்துக்களை பெறமுடியாது போன விடயங்கள் தொடர்பில் இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.