ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று(08) அதிகாலை வாகன விபத்துக்குள்ளாகியுள்ளார்.
தம்புள்ள, பெல்வெகர பகுதியில் வைத்து அதிகாலை 2.30 மணியளவில் குறித்த வாகனமானது லொறி ஒன்றுடன் மோதியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஹ்ரூப் பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனத்தில் அவரது மகன் மற்றும் மகளும் இருந்ததாகவும், காயமடைந்தோர் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.







-rizmira-