இலங்கை இராணுவத்தின் 67வது வருட நினைவு இன்று.

இலங்கை இராணுவமானது இன்று(10) தனது 67வது நிறைவு தினத்தை கொண்டாடுகின்றது.

1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ம் திகதி சிலோன் ஆர்மி எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட மேற்குறித்த இப்பிரிவு, 1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசாக மாறியதன் பின்னர் இலங்கை இராணுவம் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

இன்றைய 67 ஆம் வருட நிறைவு தின நிகழ்வுகள் பனாகொட இராணுவ முகாமில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த த சில்வா தலைமையில் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.