இந்தோனேசியாவில் சுமாத்ரா தீவில் சீனாபக் என்ற எரிமலை உள்ளது. இது கடந்த 400 ஆண்டுகளாக எந்தவித அச்சுறுத்தலும் இன்றி அமைதியாக இருந்தது.
ஆனால் கடந்த 2010–ம் ஆண்டு முதல் அந்த எரிமலை வெடிக்க ஆயத்தமானது. அதை தொடர்ந்து அந்த பகுதியில் தங்கியிருந்த மக்கள் உஷார்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று சீனாபக் எரிமலை வெடிக்க தொடங்கியது. தற்போது அதில் இருந்து கரும்புகைச் சாம்பலுடன் பாறைகளும் வெளியாகிறது.
இது போன்று 28 இடங்களில் இருந்து கரும்புகை மற்றும் சாம்பல் வெளியாகி கொண்டிருக்கிறது. எனவே எரிமலை அருகே வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை 5 ஆயிரம் பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.