நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியின் ஜா-எல சந்திப் பகுதியில் வாகன நெரிசலுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
மீதொட்டமுல்லை குப்பை மேட்டை ஏகல பகுதிக்கு கொண்டு செல்ல மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்படும் பேரணி காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
ஏகல பிரதேச மக்களே குறித்த இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக, மேலும் தெரிவிக்கப்படுகின்றது.