விசாரணைக்கு பயந்து நாட்டைவிட்டு ஓடிய அந்த மேயர் யார்?

கொலை வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மீண்டும் விசாரணைகள்முன்னெடுக்கவுள்ளதை தெரிந்து கொண்ட முன்னாள் மேயர் அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார் எனதகவல்கள் தெரிவிக்கின்றன.

தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபையின் முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்கவே இவ்வாறுவெளிநாட்டிற்குச் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2004 ம் ஆண்டு தெஹிவளை, மாநகரசபை பகுதியில் இருந்த இறைச்சிக் கடைகேள்விப்பத்திர விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவங்களுடன்தனசிறி அமரதுங்க தொடர்புப்பட்டுள்ளார் என்ற விபரம்வெளிச்சத்திற்கு வந்துள்ளளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

2004,2005,2006 ஆம் ஆண்டு தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற அரசியல் கொலைகளுடனும் தொடர்புபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன்இணைந்த பிறகு முன்னதாக இவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் அனைத்தும்மறைத்து வைக்கப்பட்டன.

தற்போது நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு குற்றப்புலனாய்வுபிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஊடாக தற்போது இடம்பெறவுள்ள விசாரணைகளை மூடி மறைக்கதனசிறி அமரதுங்க முயற்சித்து வருகின்றார்.

இந்த முயற்சி பலனிக்காமையினால் அமெரிக்கா செல்ல தீர்மானித்தார் என அவருக்குநெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தவறான வழியில் சேர்த்த பணம் மூலம் கடவத்தை மற்றும் தெஹிவளை பகுதியில் உள்ளஆடம்பர வீடு, மற்றம் ஹட்டன்-மஸ்கெலியா பகதியில் உள்ள விடுதி ஆகியசொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள்முன்னெடுக்க முடியாமல் இருப்பதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும்,கொலை தொடர்பான மேலதிக விபரங்களும் தவறாக சேகரித்த பணம் தொடர்பானவிபரங்களும் விரைவில் அம்பலமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.