முறிகண்டி பிள்ளையாரை தரிசித்த இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரம் மஹேல (Photos)

கராப்பிட்டியவில் அமையவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை சேகரிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள Trail நடைபயணம், இன்று(11) கிளிநொச்சியிலிருந்து மாங்குளத்தை நோக்கி பயணமானது.

குறித்த நடைபயணம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, நேற்று இரணைமடு சந்தியில் முடிவடைந்தது. தொடர்ந்து இன்று காலை முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்று, இரணைமடு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபயணம் மாங்குளத்தை நோக்கி புறப்பட்டுள்ளது.

குறித்த நடைபயணத்தில் இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் மஹேல ஜெயவர்தன, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

makala

makala1