உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(12) அழைப்பு விடுத்துள்ளது.

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை தயாரித்தல் நடவடிக்கைகள், உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தை திருத்தல் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ள சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.