அமைச்சரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜூன ரணதுங்கவை, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் தலைவரை வர்த்தக மாபியா என அர்ஜூன விமர்சனம் செய்தமை தொடர்பில், விளையாட்டுத்துறை அமைச்சர் ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டார்.
வர்த்தக மாபியாவுடன் திலங்க சுமதிப்பால தொடர்புப்பட்டுள்ளார் என அர்ஜூன ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார். அதே ரணதுங்க 1990களில் வர்த்தக மாபியாவின் தலைவராக இருந்துள்ளார் என விளையாட்டுத் துறை அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
திலங்க சுமதிபால ஒரு தொழிலதிபராக இருந்தில்லை. அப்படி என்றால் எவ்வாறு வர்த்தக ரீதியில் தொழிலதிபராக இருக்க முடியும் என ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் அர்ஜூன ரணதுங்கவின் சகோதர்கள் இணைந்த போதே மாபியா என்ற ஒன்று உருவாகியுள்ளது.
அர்ஜூன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவராக கடமையாற்றிய போது அவரது மூன்று சகோதரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட்டில் நியமனம் வழங்கினார்.
உறவினர்களுக்கு வழங்கிய சலுகை காரணமாகவே அது குறித்து அவர் எதுவும் பேசவில்லை என்றும் அமைச்சர் தயாசிறி மேலும் தெரிவித்துள்ளார்.