பாடகர் சிலி திலங்கவை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை மேலதிக நீதவான் தம்மிக்க ஹேமபால நேற்றியதினம் உத்தரவிட்டிருந்தார்.
பெலவத்த விஜிதபுரவில் கடந்த 6ஆம் திகதி நபரொருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் சந்தேகத்தின்பேரில் பாடகர் சிலி, நேற்று கைதுசெய்யப்பட்டார்.
தலங்கம பிரதேசத்தில் பஸ் சேவையாளர் மீது சிலி, தாக்குதல் நடத்தியதாக தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிலியை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்தபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிலி கூறுகையில்;
“நான் கொலை செய்யவும் இல்லை, யாருக்கும் அநீதி இளைக்கவும் இல்லை.. தாய்க்கு கை ஓங்கினால் தாக்குவேன்.. யாராயிருந்தாலும் இது தான் நடக்கும்..” என தெரிவித்துள்ளார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=UqFfjqFNJbQ” width=”560″ height=”315″]