அரசியலமைப்பு பேரவைக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் விரைவில்..

அரசியலமைப்பு பேரவைக்கான உத்தியோகபூர்வ இணையத்தளமும், சமூகவலைத்தள ‘செயலியும்’ ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் இவை ஆரம்பிக்கப்படவுள்ளாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த இணையத்தளம் பரீட்சாத்தமாக இயக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இணையத்தளத்தின் ஊடாக, புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களைப் பெற நாடாளுமன்றம் முயற்சிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.