நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு மீளவும் அழைப்பாணை.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க,மேன் முறையீட்டு நீதிமன்றில் இன்று முன்னிலையாகவுள்ளார்.

வருட ஆரம்பத்தில் இடம் பெற்ற வெள்ள அனர்த்தத்தின் போது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட வரிச்சலுகை தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக பிக்கு ஒருவரால் மனு ஒன்று தாக்கல் செய்யப்படிருந்தது.

எனவே, நிதி அமைச்சர், நிதி அமைச்சின் செயலாளர், சுங்கத்திணைக்கள பொதுப்பணிப்பாளர் மற்றும் ஏனைய 10 பேரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.