ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
அரச நிதிகளை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம உதயசாந்த, மஹிந்த ஆட்சி காலத்தின் போது வீடமைப்பு அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளராக இருந்த போதே இந்த மோசடி இடம் பெற்றுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.