கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் பணியாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நள்ளிரவில் தாக்கப்பட்டிருந்தனர்
இந்த தாக்குதல் சம்பவத்துடன் ஜனாதிபதியின் மகன் தஹாம் சிறிசேனவிற்கும், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கும் தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் சீ.சீ.ரீ.வி கமராகவில் பதிவாகியிருந்த 90 செக்கன் வீடியோ காட்சி தெளிவற்றதாக காணப்படுகின்றது என மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நிறுவன உரிமையாளர், முகாமையாளர் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் ஏற்கனவே வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி இன்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்போது, அவரை கொழும்பு…
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு நூற்றுக்கு 100% வரியை அறவிட நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தமக்கான…