நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப பிரச்சினைகள் காரணமாக மின் உற்பத்தி செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சக்தி மற்றும் மீள் எரிசக்தி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
இதனால் மின் உற்பத்தி நிலையத்தின் 3 பிரதான மின் உற்பத்தி இயந்திரங்களும் செயல் இழந்துள்ளதாக அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்சன ஜெயவர்தன மேலும் குறிப்பிட்டார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் தொழிநுட்ப பிரச்சினையால் வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல பிரதேசங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.