கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களை தவிர்த்து நாட்டின் ஏனைய பகுதிகளில் தினசரி மூன்றரை மணிநேரம் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று முதல் காலை 2 1/2 மணித்தியாலமும் இரவு வேளைகளில் 1 மணித்தியாலமும் மின் விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின்சார மையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே குறித்த மின்சாரத் தடை அமுல் செய்யப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மின்சாரம் கடத்தப்படும் பாதையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நேற்றுமுன்தினம் (15) நுரைச்சோலை அனல் மின் மையத்தின் மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இதனை வழமைக்கு கொண்டுவர இன்னும் 5 நாட்கள் ஆகும் என மின்சாரத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.