சயிட் அப்ரிடிக்கு பாக்.அணியின் முன்னாள் தலைவரிடமிருந்து தொலைபேசி மிரட்டலுடன் எச்சரிக்கை..

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட மற்றும் பந்து வீச்சாளராக இருந்தவர் சயிட் அப்ரிடி. மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மியாண்டட் குற்றம் சாட்டி உள்ளார்.

குறித்த இந்த குற்றச்சாட்டு குறித்து அப்ரிடி கூறும்போது, ஜாவேத் மியான்டட் எப்போதும் பணத்தை பற்றிய சிந்தனையாகவே இருப்பார்.

அவரது வாழ்க்கை முழுவதும் பணம் தான் சிந்தனை அவரது அந்தஸ்துக்கு இவ்வளவு மலிவான பேச்சு கூடாது.

அவர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இருந்தார்.

இந்நிலையில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமிடம் இருந்து அப்டிரிக்கு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் வந்துள்ளது. தாவூத் இப்ராஹிம் முன்னாள் கேப்டன் மியாண்டட்டின் உறவினராவார்.

கடந்த 12ம் திகதி போன் மூலம் அப்ரிடிக்கு தாவூத் மிரட்டல் விடுத்து உள்ளதாக மேலும் கூறப்படுகிறது.