மின்சாரத் தடை கால நேரம் 1 ½ மணித்தியாலத்தினால் குறைக்க திட்டம்..

மகாவலி நீரை மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அதிகமாக வழங்குவதற்கு மகாவலி அதிகாரிகள் உடன்பட்டுள்ளதால் தற்போது மூன்றரை மணி நேரமாக அறிவிக்கப்பட்டுள்ள மின்சாரத் தடை கால நேரத்தை குறைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

இதன்படி காலை 1 மணி நேரமும் மாலை 30நிமிடங்களும் குறைக்கப்படுவதாக, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் இன்று இது தொடர்பில் பேச்சுவார்தையொன்று இடம்பெற்றதாக அமைச்சர் இதன் போது தெரிவித்திருந்தார்.