இன்றும் மின்வெட்டு அமுலில் – தீர்வொன்றுக்கான தீர்க்கமான கலந்துரையாடல்.

மின்சக்தி நெருக்கடிக்கு நிலையான தீர்வொன்றினை பெறுவதற்காக தீர்க்கமான கலந்துரையாடல் ஒரு தேவையென மின்சக்தி மற்றும் எரிபொருள்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ள  நுரைச்சோலை அனல் மின் மையம் சீரான நிலைக்கு திரும்பியதும் குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் கடத்தப்படும் பாதையில் ஏற்பட்டுள்ள கோளாருக்கான திருத்த வேலைகள் இன்றும் நடைபெறுகின்றது.

கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும் கைத்தொழிற்சாலைகள் தவிர்ந்த நாட்டின் பிற பிரதேசங்களுக்கு இன்றும் 1 ½ மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காலை 8மணி தொடக்கம்  ஒரு மணித்தியாலமும் மாலை 6மணி தொடக்கம் அரை மணித்தியாலமும் மின்வெட்டு அமுலில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.