லண்டனில் உயிரிழந்த, ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணத்தில் எவ்வித சந்தேகமுமில்லை என ஸ்கொட்லாந் யாட் பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் மகனும் சட்டத்தரணியுமான ஆதில் பாக்கீர் மாக்கார்(25), லண்டனில் கடந்த புதனன்று(12) காலமானார்.
இவர், பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானத்துக்கான லண்டன் பல்கலைக்கழகத்தில் ஒப்பாய்வு அரசியற்றுறையில் முதுமானிக் கற்கைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே காலமாகியுள்ளார்.
சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அவர், தான் தங்கியிருந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.