மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் கலந்தாலோசிக்க கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடி இது தொடர்பில் ஆராயவுள்ளதாக கணக்காய்வாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது.
முறிகள் விநியோகம் தொடர்பான விசாரணை அறிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிக்கை கோப் குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டு, பின்னர் அது குறித்த கருத்துகள் கேட்டறியப்படவுள்ளன.
இதனையடுத்து, மத்திய வங்கியின் முறிகள் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை எதிர்வரும் 25ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.