நெவில் பெர்ணான்டோ மருத்துவமனை அரசுக்கு சொந்தமாகிறது..?

மாலபே – சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய நெவில் பெர்ணான்டோ என்ற தனியார் மருத்துவமனையை அரசுக்கு பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக அதன் தலைவர் மருத்துவர் நெவில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று(20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.