புத்தர் சிலை மீது கால் வைத்த ரொனால்டோவின் செயலால் சர்ச்சை (PHOTOS)..

காற்பந்து உலகில் ஜொலிக்கும் பிரபல காற்பந்து வீரர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ள புகைப்படம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளது.

இவர் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள தொட்டியொன்றில் தனது காலை வைத்திருப்பது போன்ற புகைப்படமொன்றை அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இவரின் குறித்த இந்த செயலை கடுமையாக கண்டிப்பதாக பல்வேறு பிரிவினர்கள் தெரிவித்துள்ள நிலையில் , பல வௌிநாட்டு ஊடகங்கள் இந்த சம்பவத்தை வௌிப்படுத்தியுள்ளன.

இவரது பேஸ்புக் பக்கத்தில் அவரைத் தொடரும் ரசிகர்களில் எண்ணிக்கை 117,072,075 ஆகும்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படம் கீழே…