2017ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்காக, 214.123 பில்லியன் ரூபாயை, அரசாங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், வடமாகாண சபைக்கு 22.094 பில்லியன் ரூபாயும் கிழக்கு மாகாண சபைக்கு 20.103 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் ஒவ்வொரு மாகாண சபைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் முழுவிவரம் வருமாறு.
- மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா: 214.123 பில்லியன் ரூபா.
- மேல் மாகாண சபைக்கு 16.516 பில்லியன் ரூபா.
- மத்திய மாகாண சபைக்கு 24.712 பில்லியன் ரூபா.
- தென் மாகாண சபைக்கு 21.04 பில்லியன் ரூபா.
- வடமேல் மாகாண சபைக்கு 23.87 பில்லியன் ரூபா.
- வட மத்திய மாகாண சபைக்கு 16.14 பில்லியன் ரூபா.
- ஊவா மாகாண சபைக்கு 18.82 பில்லியன் ரூபா.
- சப்ரகமுவ மாகாண சபைக்கு 21.65 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.