சஜின் வாஸ் இனது சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பை உடனடியாக விலக்குமாறு ஜனாதிபதி உத்தரவு.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பை உடனடியாக விலக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான உத்தரவை ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபருக்கு விடுத்துள்ளார்.

சிவில் சமூக பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு விடுத்த கோரிக்கைக்கு இணங்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ஒருவருக்கு சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறித்த அந்த பிரதிநிதிகள் தமது அதிருப்தியை ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபரை வினவியபோது இந்தப்பாதுகாப்பு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனால் வழங்கப்பட்டது என்று அவர் (பூஜித ஜெயசுந்தர) பதிலளித்துள்ளார்.

எனினும் உடனடியாக இந்த பாதுகாப்பை விலக்கிக்கொள்ளுமாறு ஜனாதிபதி பொலிஸ் அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.