பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் இலத்திரனியல் கழிவுகளின் ஒழிப்புவாரம் பிரகடனம்.

இன்று முதல் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் இலத்திரனியல் கழிவுகளின் ஒழிப்புவாரம் பிரகடனப்படுத்தப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய இந்த வாரம் பொலித்தீன், பிளாஸ்டிக், மற்றும் இலத்திரனியல் கழிவுகளின் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை வீடுகளிலிருந்தும் அலுவலகங்களில் இருந்தும் வெளியேற்றப்படும் உக்காத கழிவுகளை மாவட்ட மட்டத்தில் அமைக்கப்படுகின்ற சேகரிப்பு நிலையங்களில் கையளிக்கலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.