இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் நிஷாந்த ரணதுங்க, 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட நோட்டீஸ்க்கு அமைவாக, அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று(24) ஆஜரானார்.
கொழும்பு கிரிக்கெட் சபையின் செயலாளர் அருண டி சில்வாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் போதே, நிஷாந்த ரணதுங்கவுக்கு எதிராக கொழும்பு – கறுவாத்தோட்டம் பொலிஸார் முறைப்பாடு செய்திருந்தனர்.
அந்த முறைப்பாட்டு அமைவாக அனுப்பப்பட்ட நோட்டீஸின் பிரகாரம் நீதிமன்றத்தில் அவர் ஆஜரான போதே, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அவரை மேற்கண்ட பிணையில் விடுவித்தார்.