அமைச்சர் சஜினுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு..

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக லஞ்ச, ஊழல் மற்றும் மோசடிகள் தடுப்பு ஆணைக்குழுவில் ஜே.வி.பி.யின் இளைஞர் அமைப்பான சோசலிஷ இளைஞர் முன்னணியின் முக்கியஸ்தர்களால் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாச அண்மையில் அம்பாந்தோட்டையில் வைத்து தனது ஆதரவாளர்களுக்கு சிற்றூழியர் நியமனங்களை வழங்கும் காணொளிக் காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் அரசாங்க தொழில் நியமனங்கள் வழங்கும் ஒழுங்குமுறைக்குப் புறம்பாக அமைச்சர் சஜித் தனது ஆதரவாளர்களுக்குத் தொழில் வழங்கியுள்ளதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அவ்வாறான முறையில் தொழில்வாய்ப்புகளை வழங்குதல் இலஞ்சம் வழங்குவதற்கு ஒப்பானது என்று இலஞ்சம் மற்றும் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.