இராஜங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் கைது..

ஆனமடுவவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்று தொடர்பில் இராஜங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக

காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்தியது தான் என கூறி மேலும் ஒரு நபரும் காவற்துறையில் சரணடைந்த நிலையில், அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(24) இரவு இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் ஆனமடுவ நகரில் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 42 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது பணி முடிந்து மிதி வண்டியில் பயணித்து கொண்டிருந்த போது, குறித்த அமைச்சரின் மகனின் ஜீப் வண்டியில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இன்று(25) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.