சிம்பாவ்பே டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று(25) அதிகாலை நாட்டிலிருந்து வெளியாகியுள்ளனர்.
குறித்த அணியானது இதற்கு முன்னர் ஒருபோதும் சிம்பாப்வே அணியுடன் போட்டியிட்டதில்லை என்பதும் விசேடமானது. 2004ம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணியானது சிம்பாபெவ் அணியுடன் மோதும் முதல் போட்டி இதுவாகும்.
ஏஞ்சலோ மேத்யூஸ் உபாதைக்குள்ளாகியுள்ளதால் அணித்தலைமை ரங்கன ஹேரத் வசம் கையளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரங்கன கூறுகையில்,
“தானும் இதுவரை சிம்பாவ்பே டெஸ்ட் அணியுடன் விளையாடியதில்லை. அவ்வாறே, மற்றைய வீரர்களும் சிம்பாப்வே அணியுடன் மோதியதில்லை. புதுமுக வீரர்களுடன் களமிறங்கும் குறித்த டெஸ்ட் போட்டியானது பெரும் சவாலாக அமையப்பெற்றிருக்கும். அதுக்காக எம்மால் இயன்றளவு நாம் முயற்சிப்போம்” எனவும் தெரிவித்துள்ளார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் இற்கு பதிலாக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுளார்.
