நுரைச்சோலை அனல் மின்நிலையம் செயலிழந்தமை குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய உயர்மட்ட குழுவை இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) நியமித்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ் தலைமையில் ஆர்.ஐ. சேனாரத்ன மற்றும் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
நுரைச்சோலை அனல் மின்நிலையம் செயலிழந்தமைக்கான காரணத்தை கண்டறிதல், செயலிழப்பை தவிர்த்துக்கொள்ள முடியுமாக இருந்ததா என ஆராய்ந்து எதிர்காலத்தில் இவ்வாறான செயலிழப்புக்கள் நிலவாமல் இருப்பதற்கான பரிந்துரைகளை குறித்த குழு முன்வைக்கவுள்ளது.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக கடந்த 15 ஆம் திகதி கொழும்பு தவிர்ந்த நாடு பூராகவும் சுமார் ஒன்றரை மணி நேரம் மின் வெட்டு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.