மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர் கைது.

மட்டக்குளி – சமிதிபுர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகத்துக்குரியரான ‘குடு ரொசான்’ உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் ஆயுதங்களுடன் அவர்கள் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தினபுர பிரதேசத்தில் தலைமறைவாகி இருந்த நிலையில் அவர்கள் இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு குறித்த துப்பாக்கிச்சூட்டு இந்த சம்பவம் இடம்பெற்றது.

இதில் நான்கு பேர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.