மஹிந்தவின் தோல்விக்கு பொதுபல சேனாவே காரணம் : டிலான் பெரேரா..

(அஸீம் முஹம்மத்)

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ படுதோல்வி அடைவதற்கு காரணம் கடும்போக்கு வாத அமைப்பைச் சேர்ந்த சில மதக் குழுக்களின் இனவாத செயற்பாடுகளேயாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

“பொதுபலசேனா போன்ற கடும்போக்கு இனவாத மதக்குழுவுடன் அவர்களது அநாகரிக செயற்பாடுகள் தொடர்பாக நேருக்கு நேர் தகுந்த பதில் கூறியவன் என்ற விதத்தில் இத்தகைய இனவாதிகளின் நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டாம் என்று அன்று பல தடவைகள் முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன்.

அன்று எனது வார்த்தைகளை அவர் செவிமடுத்திருந்தால் இன்றும் இந்நாட்டின் ஜனாதிபதியாக மகஹிந்த ராஜபக்ஷவே இருந்திருப்பார்.”
கலேவெல பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள ரன்வெடியாவ கிராமத்தில் நவீன மயப்படுத்தப்பட்ட மஸ்ஜிதுல் ஹிமிர் ஜும்ஆப் பள்ளிவாசலின் திறப்பு விழா வைபவ நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.