மத்திய வங்கியின் முறி விநியோக விவகாரம் தொடர்பில் கோப் குழு இன்று கூடுகிறது.

மத்திய வங்கியின் முறி விநியோக விவகாரம் தொடர்பில் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவான கோப் குழு இன்றும் கூடவுள்ளது.

பிற்பகல் 2.30க்கு நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அதன் தலைவர் சுனில் ஹந்துநெத்தி தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஜே வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினரும், கோப் குழுவின் உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்றையதினம் இடம்பெறும் கூட்டத்தில் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ள இறுதி அறிக்கை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமையும் கோப் குழுவின் கூட்டம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.