UPDATE – ஊனமுற்ற படைவீரர்களது ஆர்ப்பாட்டத்தினால் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொழும்பு காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதியான லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உத்தேச ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் ஊனமுற்ற படைவீரர்கள் இன்று போராட்டத்தில்..

ஊனமுற்ற படைவீரர்கள் இன்று(31) கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுக்க ஆயத்தாமாகியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தேச ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் படைவீரர்களின் கோரிக்கையை தற்போதைய நல்லரசு இதுவைரயில் நிறைவேற்றவில்லை என படைவீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய முன்னணியின் தலைவர் யு.பி.வசந்த தெரிவித்துள்ளார்.

பத்து வருடங்களுக்கும் குறைந்த சேவைக் காலத்தை உடைய ஊனமுற்ற படைவீரர்களுக்கான ஓய்வூதியம் வெறும் சுற்று நிருபத்திற்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டுமென கடந்த ஜூலை மாதம் 30ம் திகதி போராட்டம் நடத்தப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அன்று, போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மூன்று மாதங்களில் தீர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

எனினும் இதுவரையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது காலத்தின் அவசியம் எனவும் வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் யு.பி.வசந்த சங்கத்தின்  கோரிக்கை அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.