இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் உபுல் தரங்க சாதனை..

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க சதம் விளாசி உலக சாதனைக்கு உள்ளாகியுள்ளார்.

அது இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் (1945 இற்கு பின்னர்) ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து பல காலங்கள் கடந்து மற்றுமோர்  டெஸ்ட் சதம் அடித்துள்ள வீரராக உபுல் தரங்க திகழ்கிறார்.

உபுல் தனது முதல் டெஸ்ட் சதத்தினை 2006ம் ஆண்டு மார்ச் மாதம் 08ம் திகதி சாதித்திருந்தார். ஆனால், அவரது இரண்டாவது டெஸ்ட் சதமானது 10 வருடங்களுக்கு பின்னர் நிகழ்ந்துள்ளது. அது 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ம் திகதியாகும். இவ்விரண்டு சதங்களுக்கும் இடைப்பட்ட காலமானது 3888 நாட்களாகும்.

அதற்கு முன்னர் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் சதம் குவிக்க அதிக நாட்கள் எடுத்த வீரராக சிம்பாவ்பே அணியின் வீரர் ஹெமில்டன் மெசகட்சா திகழ்கிறார். அவரது சதங்களுக்கு இடைப்பட்ட காலமானது 3660 நாட்களாகும்.

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் சதம் விளாசியதற்கு பின்னர் அடுத்த சதம் அடிக்க அதிகூடிய காலங்களை எடுத்த வீரர்களாக;

உபுல் தரங்க, நாட்கள்  3888 (2006/மார்ச்  -2016/ ஒக்டோபர்)

ஹெமில்டன் மெசகட்சா, நாட்கள் 3660 (2001/ஜூலை – 2011/ஆகஸ்ட்)

ரொப் சிம்சன் (அவுஸ்திரேலியா) நாட்கள் 3639 (1967 டிசம்பர் -1977 டிசம்பர்)

பர்ட் சுட்க்ளிபி (நியூசிலாந்து) நாட்கள் 3367 (1955/நவம்பர்-1965/மார்ச்)

முஸ்தாக் முஹம்மத் (பாகிஸ்தான்) நாட்கள் 3234 (1962/ஜூலை -1971 /ஜூன்)