துமிந்தவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவு.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை எதிர்வரும் ஜனவரி 05ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்த ஐந்து வழக்குகள் தொடர்பிலேயே அவரை அடுத்த வருடம் நீதிமன்றில் முன்னலைப்படுத்துமாறு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகல மேற்குறித்த உத்தரவை இன்றைய தினம் பிறப்பித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் கொலை வழக்கு தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.