பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஹொங்கொங் விஜயம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(02) ஹொங்கொங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

ஜெர்மன் ஆசிய பசுபிக் வர்த்தக சர்வதேச சம்மேளனத்தின் 15ம் அமர்வுகளில் பங்கேற்பதற்காகவே பிரதமர் ஹொங்கொங் விஜயம் செய்ய உள்ளார்.

இந்த அமர்வுகள் நாளை முதல் எதிர்வரும் 5ம் திகதி வரையில் ஹொங்கொங் மாநாடு நடைபெறவுள்ளது.

1986ம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஆசிய மற்றும் ஜெர்மன் பிராந்திய நாடுகளின் வர்த்தகப் பிரமுகர்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.