சிகரெட் உபயோகத்தினால் உடலில் ஏற்படும் பாதிப்பைவிட பீடியை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறைவு என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று(02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சிகரெட்டின் விலை அண்மையில் அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.