கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுலுக்கு..

கொழும்பின் பல பகுதிகளில்  நாளை மறுதினம்(05) இரவு முதல் 8 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

பேஸ்லைன் வீதியின் களனி பாலத்துக்கு அருகில் இருந்து தெமட்டகொடை  சந்தி வரையான பிரதான பாதை மற்றும் சகல உள்ளக வீதிகள், ​ஹெட்டி வீதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், கொழும்பு 13, 14,15 ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுலில் இருக்கும்.

சனிக்கிழ​மை இரவு 9 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிவரையான 8 மணித்தியாலங்களுக்கு  இந்த பிரதேசங்களுக்கான நீர்விநியோகம் துண்டிக்கப்பட்டிருக்கும்.