பிணைமுறி விநியோக விவகாரம் – மத்திய வங்கியின் நிதிச்சபைக் கூட்டமானது இன்று கூடுகிறது.

மத்திய வங்கியின் நிதிச்சபைக் கூட்டமானது இன்று(04) கூடவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமார சுவாமி தெரிவித்துள்ளார்.

இதன்போது மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக விவகாரம் குறித்த கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

கோப் குழுவின் அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கோப் அறிக்கை குறித்து பிரதிவாதங்கள் எழுந்த நிலையில், மத்தியவங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் மீதும் குற்றம் சுமத்தப்படிருந்தது.

இந்நிலையில் குறித்த அறிக்கை தொடர்பான அடுத்தக்கட்ட செயற்பாடு குறித்த இன்றைய கூட்டத்தில் நிதி சபை தீர்மானிக்கும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.