வெல்கமவுக்கு எதிரான விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம்..

கடந்த ஆட்சியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்ததில் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணை, அறிக்கை சட்டமா அதிபருக்கு கிடைத்துள்ளதாக அரச சட்டத்தரணி மாதவ தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வந்தனர்.

தன்னை கைது செய்வதை தடுத்து நிறுத்தி இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, குமார வெல்கம தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு நேற்று(03) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பியசாத் டெப், உபாலி அபேரத்ன, அனில் குணரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.