தனஞ்சய’வின் சதத்தினால் இலங்கை அணி முன்னேறியது..

இலங்கை மற்றும் சிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று(07) இடம்பெறவுள்ளது.

நேற்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிவரும் இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவின்போது 5 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 290 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் சதம் ஒன்றை பெற்றுக் கொடுத்துள்ளார்.