மத்திய வங்கியின் பிணை முறி விற்பனை குறித்து புதிய நடைமுறை.

மத்திய வங்கி பிணை முறி விற்பனை குறித்து புதிய நடைமுறை எதிர்வரும் காலங்களில் பின்பற்றப்படும் என மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

புதிய ஏல விற்பனை முறையொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் மோசடிகள் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் வரையறுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், புதிய முறைமயை முழுமையாக தயாரித்து உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய நிபுணர்களின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில மாதங்களில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.