புதிய அரசியல் நோக்கில் கட்சி அமைத்து கட்சியில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டால் சுதந்திரக் கட்சியின் அங்கத்துவம் ரத்தாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய கட்சி குறித்து துமிந்த திஸாநாயக்க ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்;
சுதந்திரக் கட்சியில் எந்தவொரு பதவி வகித்தாலும் எவ்வாறான நிலையில் இருந்தாலும் புதிய அரசியல் கட்சியில் இணைந்துகொண்டால் அவர்கள் கட்சி உறுப்புரிமையை இழக்க நேரிடும்.
வேறும் கட்சியில் இணைந்து கொள்வதனால் கட்சி உறுப்புரிமையை இழக்கும் நபர்கள் மேன்முறையீடு செய்து கட்சி உறுப்புரிமையை மீளப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடையாது என அவர் மேலும் கூறியுள்ளார்.